கிளிநொச்சியில் வெள்ளவாய்க்கால் புனரமைப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - செல்வபுரம் கச்சார் வெளி வீதியின் வெள்ளவாய்க்காலின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பச்சிலைப்பள்ளி பகுதியில் அனர்த்த குறைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 14.56 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைக்கும் வகையில் பல்வேறு அனர்த்த குறைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், இதற்கான நிதி வழங்கப்பட்டு, வேலைகள் இடம்பெற்று வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.