யாழில் கத்தி வெட்டில் முடிந்த கருத்து வேறுபாடு!

Report Print Thamilin Tholan in சமூகம்

இரண்டு நண்பர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடு முற்றியமையால் கத்தி வெட்டில் முடிவடைந்துள்ளது.

அச்சுவேலிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்தில் 21 வயது இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுளளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இருவரும் நெருங்கிய நண்பர்களாகவுள்ள நிலையில் நேற்று மாலை 06 மணியளவில் அச்சுவேலிச் சந்திப் பகுதியில் வழமை போன்று அளவளாவிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. கருத்து வேறுபாடு முற்றியதையடுத்து இருவருக்குமிடையில் கைகலப்பு உருவாகி, அது கத்தி வெட்டில் முடிவடைந்தது.

சம்பவத்தில் அச்சுவேலி வடக்குப் பகுதியைச் சேர்ந்த எஸ். நிரோஜன்(வயது-21) படுகாயமடைந்த நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட முரண்பாடே மேற்படி சம்பவத்துக்கான காரணமெனத் தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.