கிளிநொச்சியில் மணல் அகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - கிளாலிப்பகுதியில் மணல் அகழ்வுகளுக்கு எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலாளர் ஜெயராணி பரமோதயன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவின் கீழ் உள்ள கிளாலிப்பகுதியல் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இவ்வாறு பாரியளவில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், இதுவரை இதனைக் கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்ல என பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மணல் அகழ்வுகளுக்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை, இருப்பினும் சிலர் தொடர்ச்சியாக இப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொதுஅமைப்புக்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.