யாழ்.புங்குடுதீவில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்.புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியில் இன்று புதிய பொலிஸ் நிலையம் ஒன்று வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னான்டோவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு மேற்படி பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாரத பெர்னான்டோ, யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெலசின்லாஸ், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.