மட்டக்களப்பு, நவகிரியில் 2,300 ஏக்கரில் வேளாண்மைச் செய்ய தீர்மானம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மட்டக்களப்பு, நவகிரி பகுதியில் 2, 300 ஏக்கரில் வேளாண்மைச் செய்வதற்கான தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் வெல்லாவெளியில் இடம்பெற்றது.

இதன்போது 2017, 2018ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக வேளாண்மைச் செய்கை தொடர்பிலும் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக வேளாண்மை ஆரம்பிக்கப்படும் திகதி நிறைவு செய்யப்படும் திகதி, அதற்கான நீர்பாசனம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அத்துடன் விவசாயிகளின் நன்மை கருதி இந்த பகுதியிலுள்ள காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் முகமாக அடுத்தவாரம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.