சமூக சேவை திணைக்களத்தால் வவுனியாவில் மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

முதியோரை பேணுவது மற்றும் அவர்களை சமூகத்தில் முக்கிய அங்கமாக கரிசனை கொள்வது தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் நடத்தப்பட்டுள்ளது.

புதுக்குளம் மகாவித்தியாலய அதிபர் சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் கருத்துரைகளை வழங்கியிருந்தார்.

வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்தால் மாணவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்செயற்றிட்டமானது பாடசாலை ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.