புதிய கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனக்கடிதங்கள்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு (2015/2016) இம்முறை தெரிவான 306 உத்தியோகத்தர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் நடைபெற்றுள்ளது.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் அதிதிதிகளாக கலந்துகொண்டு நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தனர். அதனையடுத்துஅவர்கள் கடமையைப்பொறுப்பேற்கவுள்ளனர்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு (2015/2016) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத்தோற்றிய 812 பேரில் 306 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கடந்த வாரம் பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இப்பதவிக்கு 515 வெற்றிடங்கள் நிலவுவதாக குறிப்பிட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2016.07.09 இல் போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு பரீட்சை முடிவுகளின் படி 812பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு 306 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.