காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் தியாகி திலீபனின் நினைவேந்தல்

Report Print Suman Suman in சமூகம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் தியாகி திலீபனின் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

குறித் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் உள்ள போராட்ட மண்பத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, தியாகி திலீபனிற்கு விளக்கேற்றப்பட்டு மாலை வணக்கம் செலுத்தி அஞ்சலி நடத்தப்பட்டுள்ளதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நினைவுவுரையும் இடம்பெற்றள்ளது.

மேலும், திலீபன் அகிம்சையாக போராடியிருந்தார். நாமும் எமது பிள்ளைகளை மீட்டு தருமாறு கோரி அகிம்சை வழியில் போராடி வருகின்றோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.