திலீபனின் நினைவிடத்திற்கு அண்மையில் விசேட அதிரடிப்படை குவிப்பு : நல்லூரில் பரபரப்பு

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். நல்லூரில் தியாகதீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(26) பகல் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது.

இந்த நிலையில் நல்லூர் பின் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அண்மையில் பத்திற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தமையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் திலீபனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற பொதுமக்கள் பலர் அச்சத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்பகுதியிலுள்ள வீதியால் போக்குவரத்துச் செய்பவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.