கிராமங்களில் இருக்கின்ற பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்

Report Print Yathu in சமூகம்

கிராமங்களில் இருக்கின்ற பொருளாதாரங்களை வளப்படுத்துவதன் மூலம் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என கரைச்சிப்பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள அப்பள உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இடப்பெயர்வின் பின்னர் மக்களை மீள்குடியேற்றுவதும், அவர்களின் வாழ்வதார உதவிகளை நிறைவேற்றுவதும் அரச பணியாளர்களான எங்களின் காலங்கள் கடந்து விட்டன, அல்லது கரைந்து விட்டன.

மீள்குடியேற்றத்தின் பின்னர் எட்டு ஆண்டுகளைக் கடந்து விட்டோம். மக்களின் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை பாரியளவில் செயற்படுத்த வேண்டியுள்ளது.

அரசினால் மானியங்களாக கிடைக்கப்பெறுகின்றவற்றை வைத்து வாழுகின்ற நிலையை மாற்றி சுய பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற வேலைத்திட்டங்களை பாரியளவில் முன்னெடுக்கவேண்டியுள்ளது.

மக்கள் தமது சுய பொரளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய நிலையில் இது போன்ற தொழிற்சாலைகள் கிராமங்கள் தோறும் உருவாக்கப்பட வேண்டும்.

எமது பொருளாதாரம் என்பது கிராமங்களில் இருக்கின்ற பொருளாதாரத்தை வளப்படுத்துவன் மூலம் கட்டியெழுப்பமுடியும்.

இத்தொழிற்சாலையானது பல பெண்களின் வாழ்வாரத்திற்கு வழிவகுக்கும் என்பதுடன், உள்ளுர் உற்பத்தியை கட்டியெழுப்புகின்ற மையப் புள்ளியாக அமையும் என நான் நம்புகின்றேன்.

எனவே பல்வேறு திட்டங்களினூடாக இவ்வாறன தொழில்சாலைகள் உருவாக்கப்பட்டு கிராமங்கள் முன்னேற்றம் அடையவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.