வவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இன்றைய தினம் தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், தமிழ் விருட்சம் அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம், தமிழ்த் தேசிய இளைஞர் ஒன்றியம் வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கம் ஆகியன கலந்து கொண்டிருந்தன.

இது தவிர வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனம் போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு விதையாகி போன தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியும் தீபச்சுடர் ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.