திலீபனுக்கு செய்கின்ற துரோகமாகிவிடும்! அருட்தந்தை துரைரெட்னம்

Report Print Yathu in சமூகம்

தமிழ் சமுகதத்தில் காணப்படுகின்ற தீமைகள் எமது உரிமைக்காக உயிரைத் தியாகம் செய்த திலீபன் போன்ற தியாகிகளுக்குச்செய்கின்ற துரோகமாக அமைந்துவிடும் என அருட்தந்தை துரைரெடனம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் தீலிபனுடைய 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழர்களாகிய எங்களது உரிமைகளுக்காக பல்வேறுபட்ட திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

எதுவாக இருந்தாலும் ஒற்றுமையாக கேட்டுப்பெறவேண்டிய சூழ்நிலையொன்று உலக அரசியலில் எமக்கு இருக்கின்றது.


ஆகவே தமிழர்களாக, இளைஞர்களாக, தமிழ் மக்களாக இருக்கின்ற நாம், திலீபன் உட்பட தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுடைய கனவுகளை நிறைவு செய்ய நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

எங்களிடத்திலே இருக்கின்ற தீங்கான காரியங்களை எங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்றி விடவேண்டும். எமது தமிழ் சமுகத்தில் காணப்படுகின்ற தீமைகள் திலீபன் போன்ற தியாகிகளுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.

ஆகவே எங்கள் வீடுகளில் இருக்கின்ற இளைஞர்களுக்கு, எங்களுடைய விழுமியங்களை அறிவுறுத்தி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்

இவ்வாறு செய்யும் போது தான் எங்களின் உரிமைகளுக்கு ஒருமித்த குரலாக அரசியல் ரீதியில் வெற்றி பெறுகின்ற போது திலீபனுடைய பசியைப்போக்கக்கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.