பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் டெங்கு குடம்பிகள்

Report Print Aasim in சமூகம்

பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் தரித்திருந்த ஏராளமான படகுகளில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பேருவளை மற்றும் அயல் பிரதேசங்களில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முப்படையினரையும் இணைத்துக் கொண்டு சுகாதாரத்துறையினர் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளம் படகுகளில் டெங்கு குடம்பி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன் உரிமையாளர்கள் முன்வந்து அபராதத் தொகை செலுத்தும் வரையில் குறித்த படகுகள் துறைமுக கட்டுப்பாட்டாளரின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.