வடமாகாண முதலமைச்சருக்கு சத்திரசிகிச்சை: இருதய சிகிச்சை விடுதியில் தங்கவைப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வடமாகாண முதலமைச்சரின் உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதற்கு நேற்றைய தினம் குறித்த சத்திரசிகிச்சை நடைபெற்று அவர் தற்போது இருதய சிகிச்சை விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் விடுமுறை கோரியபோதும், யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள காரணத்தினால் இதுவரை பதில் முதலமைச்சராக எவரையும் நியமனம் செய்யவில்லை என தெரியவருகின்றது.