அமைச்சரின் வீட்டில் கைவரிசையை காட்டிய இளைஞன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

தலங்கம - ஹோக்கந்தர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தொழில் இராஜாங்க அமைச்சர் ரவிந்திர சமரவீரவின் வீட்டில் இருந்த மின்சார உபகரணங்கள் மற்றும் பொருட்களை திருடிய இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹோக்கந்தர தெற்கு புஞ்சி வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையானதன் காரணமாக இந்த பொருட்களை திருடியதாக இளைஞன் கூறியுள்ளார்.

இதேவேளை, கொள்ளையிட்ட பொருட்களில் சிலவற்றை சந்தேகநபர் விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.