கொட்டும் மழையிலும் 219ஆவது நாளாக தொடரும் போராட்டம்

Report Print Yathu in சமூகம்

​முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி கொட்டும் மழையிலும் 219ஆவது நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கேப்பாப்புலவில் இன்று கடும் மழை பெய்த போதிலும் இந்தப் போராட்டம் தொடர்கின்றது.

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் குழந்தைகள் முதியவர்கள், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் அந்த இடத்தில் மூன்று நேர உணவையும் சமைத்து உண்ணுகின்ற நிலைமையில், இன்று கொட்டிய கடும் மழையினால் அவர்கள் பல துன்பங்களை அனுபவித்துள்ளதுடன், உணவு உட்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.