கழிவுத் தேயிலையுடன் ஹட்டனில் இருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

அனுமதிப்பத்திரமின்றி கழிவுத் தேயிலை ஒருத் தொகையை டிப்பர் லொறியில் ஏற்றிவந்த இருவரை ஹட்டன் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அனுமத்திப்பத்திரமின்றி சட்டவிரோதமாக ஆகரப்பத்தனை பகுதியில் இருந்து கழிவுத்தேயிலை கொண்டுவரப்படுவதாக ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா தொழிற்சாலை பகுதிக்கருகில் ஹட்டன் பொலிஸார் இன்று மாலை சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சுற்றிவளைப்பின் மூலம் மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழிவுத்தேயிலையுடன் குறித்த டிப்பர் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.