யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்!

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையின் கல்விக் கண்காட்சி இன்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாசாலையின் அதிபர் தி.மோகனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கானைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் நொபேட் உதயகுமார் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பாடசாலை வரலாற்றில் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தப்பட்ட கல்விக் கண்காட்சியாக இது அமைந்தது.

அதிபரின் வழிநடத்தலில், ஆசியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கைவண்ணத்தால் இக்கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

தரம் ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான வகுப்புக்களை மட்டுமே கொண்ட இப்பாடசாலையின் கண்காட்சியானது, ஒரு கல்லூரியின் கல்விக் கண்காட்சி போன்று சிறப்பாக இருந்தது.

அனைத்து மாணவர்களும் பல்வேறு துறைசார்ந்து தமது ஆக்கங்களை வழங்கியிருந்தனர். குறிப்பாக, கணித, விஞ்ஞான செயன்முறைகளும் அதற்கான விளக்கங்களும் மிகவும் சிறப்பாக அமைந்தன.

கீழ்ப்பிரிவு மாணவர்கள் உயர்தர வகுப்பு மாணவர்களைப் போல மிகவும் சிறப்பான முறையில் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் நேசராணி தனபாலசிங்கம், தமிழ்ப் பாட ஆசிரிய ஆலோசகர் சுகுணா சண்முகேந்திரன், பொன்னாலை கிராம சேவையாளர் ப.தீசன், வேல்ட் விஷன் திட்ட வளவாளர் வென்சஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.