எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது! யோகேஸ்வரன் எம்.பி

Report Print Kumar in சமூகம்

தனக்குரிய பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகவும், தனது அலுவலகம் தாக்கப்பட்டுள்ளமையானது பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதையே காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - பார் வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒருபோதும் தன்னிடம் வராத காணி அபிவிருத்தி ஆணையாளர் தனது மனைவியுடன் வந்து தர்க்கம்புரிந்தார். தர்க்கம்புரியும் வகையிலேயே அவர் என்னிடம் கதைத்தார்.

இதனையடுத்து இருவரையும் எனது அலுவலகத்தினை விட்டு வெளியில்செல்லுமாறு கோரினேன். அதன்போது குறித்த காணி அபிவிருத்தி ஆணையாளர் என்னை தாக்கமுற்பட்டார்.

இந்நிலையில், எனது பாதுகாப்பிற்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினால் அனுப்பப்பட்டபொலிஸ் உத்தியோகத்தர் காணி ஆணையாளரை தடுத்தபோது, குறித்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தினார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.