அபாயகரமான வெடிபொருட்கள் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, பெருங்காட்டு பகுதியில் அபாயகரமான இராணுவ வெடிபொருட்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டு பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் இறுதி யுத்தத்தின் போது குறித்த பகுதியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்றை வைத்திருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த காட்டு பகுதியில் இருந்து வவுனியா, நெடுங்கேணி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு கனரக வாகனங்களின் ஊடாக வெடிபொருட்களை கொண்டு செல்லக்கூடிய தரைவழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் யுத்த காலத்தில் அந்த இடத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தற்பொழுது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்படும் அபாயகரமான வெடிபொருட்கள் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.