கடுமையாக போதைப் பொருளுக்கு அடிமையான அறுவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

அனுராதபுரம், நுவரவெவவத்தை பிரதேசத்தில் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 2.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று இளம் பெண்கள் பாலியல் தொழிலாளிகள் எனவும் அவர்கள் கடுமையாக ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண்கள் முறையே 22, 25 மற்றும் 28 வயதானவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் விடுதியில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளிகளான பெண்கள், காலி, களனி வனவாசல மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பெண்கள் 22, 25 மற்றும் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் திருமணமாகி கணவனை கைவிட்ட ஒரு பிள்ளையின் தாய்மார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.