ஜப்பானில் வேலை பெற்று தருவதாக கூறி 4 கோடி ரூபாவை மோசடி செய்த பெண் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நான்கு கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த பெண்ணொருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜப்பானில் தொழில் பெற்று தருவதாக கூறி 50இற்கும் மேற்பட்டோரின் பணத்தை பெற்றுக்கொண்ட போதிலும் தொழில் பெற்று தரவில்லை என பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமையவே பெண்ணை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஷர்மிளா ஜயரத்ன என்ற பெண்ணையே அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

பெண்ணை கைது செய்தபோது அவரது வீட்டில் இருந்து 80 கடவுச்சீட்டுகள், ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான உடன்படிக்கைகள், தொழிலுக்கு தேவையான உடல் நலம் தொடர்பான மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் சத்தியக்கடிதங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.