சீ.சீ.டிவி கமெராக்கள் பொருத்தப்பட்ட முதல் சிறைச்சாலை திறந்து வைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

ஹம்பாந்தோட்டை, அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நியமிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலை, அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திற்கு அமைய இந்த புதிய சிறைச்சாலை கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை சிறைச்சாலை வரலாற்றில் சீ.சீ.டிவி கமெரா கட்டமைப்பு பொருத்தப்பட்டுள்ள முதல் சிறைச்சாலை இதுவாகும்.