வடக்கு முதல்வருக்கு எதிராக டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனால் முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் தெஹிதெனிய மற்றும் நீதியரசர் அமரசேகர ஆகியோரால் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கை நடத்தக் கூடிய சட்ட ரீதியான காரணங்கள் எதுவுமே இல்லாதபடியினால் முதலமைச்சருக்கு அறிவித்தல் கொடுக்காமலே வழக்கு முதல் நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டது.

டெனீஸ்வரனின் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோவும் எதிர்வாதி வைத்தியர் சத்தியலிங்கம் சார்பில் சட்டத்தரணி நிரான் அங்கிடெல் அவர்களுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் முதலமைச்சர் சார்பில் சட்டத்தரணி ஜெயக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் அமைச்சர்களை நியமிப்பது ஆளுநருக்கே உரித்தான அதிகாரம் என்றும் முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் டெனீஸ்வரன் சார்பிலும் வைத்தியர் சார்பில் சத்தியலிங்கம் சார்பிலும் அவர்களுடைய சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த வாதம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.