சட்டவிரோத மின்சார இணைப்பை பெற்றிருந்த லிற்றோவின் முன்னாள் தலைவர்

Report Print Ajith Ajith in சமூகம்

லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சஹில முனசிங்க, 2014ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான மின்சார இணைப்பை பெற்றுக் கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தாய்வான் வங்கி ஒன்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முனசிங்க, இன்று கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே சட்டவிரோத மின்சார இணைப்பு பெற்றமை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டது.