சட்டவிரோத துப்பாக்கியுடன் முல்லைத்தீவில் ஒருவர் கைது!

Report Print Mohan Mohan in சமூகம்

சட்டவிரோதமான கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு - இருட்டுமடுப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுகுடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து குறித்த நபரின் வீட்டில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.