சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்க கொடுக்கப்பட்ட தண்டனை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவருக்கு தலா இருபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் 12 நாட்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டுமென்றும் நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை கைது செய்து அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.