பல இலட்சம் ரூபா பெறுமதியான பாலை மரக்குற்றிகளை கடத்திச்சென்ற இருவர் கைது!

Report Print Yathu in சமூகம்

சட்டவிரோதமான முறையில் பாலை மரக்குற்றிகளை கொண்டுச் சென்ற இருவரை கிளிநொச்சி - பூநகரி, பள்ளிக்குடாப் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், மரக்குற்றிகளை கொண்டுச் செல்ல பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட பாலைமரக்குற்றிகள் பல இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சான்றுப்பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.