கல்விக்கு வசதி செய்யமுடியாவிட்டால் கருத்தடைக்கு வழிபண்ணுங்கள்

Report Print Aasim in சமூகம்

பாலர் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு வழி செய்யமுடியாது போனால் கருத்தடை செய்வதற்கான வழிகளைச் செய்து தருமாறு மாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபையின் இன்றைய அமர்வில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினரும், சபையின் பிரதித் தவிசாளருமான யசபால கோரளகே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

ஹொரணை பிரதேசத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டுக்கான முதலாம் வகுப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக குழந்தைகள் மட்டுமன்றி அவர்களின் பெற்றோரும் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பதாக யசபால கோரளகே குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாகாண சபையினால் குழந்தைகளின் முதலாம் ஆண்டுக்கான அனுமதி மற்றும் வகுப்புகளை கூட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது போனால் பெற்றோருக்கு கருத்தடை செய்விப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவர் விமர்சித்துள்ளார்.

இதன் போது மாகாண கல்வி அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ எதுவித பதிலும் வழங்காமல் மௌனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.