வடக்கிற்கும் தெற்கிற்கும் வேறு வேறு சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை! பொலிஸ்மா அதிபர்

Report Print Kamel Kamel in சமூகம்

வடக்கிற்கும் தெற்கிற்கும் வேறு வேறு சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

சட்டத்தை அமுல்படுத்தும் போது வடக்கு தெற்கு என்ற எந்தவிதமான பேதமும் பாராட்டப்படுவதில்லை. குற்றம் இழைக்கும் எந்தவொரு நபரையும் தராதரம் பாராது கட்சி பேதம் பாராது கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.