யாழில் மரணிக்கும் முன் நீதிபதி இளஞ்செழியனுக்கு உருக்கமான கடிதம் எழுதிய 3 பிள்ளைகளின் தாய்

Report Print Sumi in சமூகம்

யாழ். அரியாலையில் மூன்று குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட பெண் நீதிபதி இளஞ்செழியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கும், தமது குடும்பத்தாருக்கும் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ். அரியாலை பகுதியில் உள்ள 28 வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தை, 2 மற்றும் 1 வயது ஆண் குழந்தைகளுக்கு நஞ்சு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த கடிதத்தை வாசிக்கும் போது அனைவரும் கவலையடைந்ததை காணக்கூடியதாக உள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸாருக்கே குறித்த பெண் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

இதில் தான் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை குறிப்பிட்டதுடன், குடும்பத்தாருக்கு ஆருதல் கூறியும் கடிதம் எழுதியுள்ளார்.

இவர் நீதிபதி இளஞ்செழியனுக்கு எழுதிய கடிதத்தில் “எங்கள் சாவுக்குசிறுசங்கர் மனைவி சுகன்யா, சிறிதரன் ஆகியோரே காரணம், தவறு செய்பவனை விட தவறு செய்ய தூண்டுபவனே குற்றவாளி” என அந்த கடிதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி -

யாழில் நடந்த விபரீதம்! தாயும் 3 குழந்தைகளும் நஞ்சருந்தி தற்கொலை