தகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தும் செயலமர்வு, கண்காட்சி

Report Print Rusath in சமூகம்

கிழக்கு மாகாணத்திலுள்ள சிறிய நடுத்தர வணிக முயற்சியாளர்களின் தகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தல் தொடர்பிலான செயலமர்வும், கண்காட்சியும் நடைபெற்றுள்ளன.

குறித்த செயலமர்வு மற்றும் கண்காட்சி இன்று (26) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

கனேடிய உலக பல்கலைக்கழகம், ஐ.சீ.ரீ.ஏ. கிழக்கு மாகாணத்திலுள்ள தொழில்நுட்பத்துறைசார் நிறுவனங்கள் இணைந்து இந்தச் செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் சுற்றுலாத்துறை, கணணி, மோட்டார் வாகன, கட்டுமானத்துறைகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களின் 150 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் இச் செயலமர்வில் பங்கு கொண்டனர்.