பரபரப்பை ஏற்படுத்திய பெண்! 7 பேர் காயம் - பல வாகனங்கள் சேதம்

Report Print Vethu Vethu in சமூகம்

கம்பஹா மீரிகமவில் அதி வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்ற பெண்ணினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாகனத்தின் அதீத வேகம் காரணமாக ஏழு பேர் காயமடைந்துள்ளதுடன், 5 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று சிறுவர்கள் உட்பட இரு ஆண்களும் இரு பெண்களும் காயமடைந்துள்ளனர். இதில் மோட்டார் வாகனத்தை ஓட்டிச் சென்ற பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் மீரிகம விஜயரஜதஹான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த அனைவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள ஆண் ஒருவர் வத்துபிட்டவல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விஜயரஜதஹான பிரதேச வீதியில் வேகமாக வந்த மோட்டார் வாகனம் அருகில் இருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதியுள்ளதுடன், வீதியில் பயணித்த 6 பேரை காயப்படுத்தி, இறுதியில் மாமரம் ஒன்றுடன் மோதி நின்றுள்ளது.

குறித்த மோட்டார் வாகனத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தை ஓட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Offers