கரைவலையில் கூட்டமாக அகப்பட்ட பாரைக்குட்டி மீன்! மகிழ்ச்சியில் மீனவர்கள்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனைக் கடற் பகுதியில் நேற்றைய தினம் அதிளவான பாரைக்குட்டி மீன்கள் கரைவலைக்கு அகப்பட்டுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காரைதீவு - நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் அண்மையில் கீரி மீன்கள் பெருமளவில் பிடிபட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்றைய தினம் பிடிப்பட்ட பாரைக்குட்டி மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளதுடன், இதனால் கூடிய வருமானத்தையும் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், எதிர்பார்க்காமல் அதிர்ஷ்ட வசமாக இவ்வளவு பாரைக்குட்டி மீன்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால் அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers