கொழும்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள சீ.சீ.டீ.வி காணொளி

Report Print Sujitha Sri in சமூகம்

இந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் பதிவாகுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அண்மையில் கொழும்பு, விஜேராமையில் இடம்பெற்ற வித்தியாசமான திருட்டு சம்பவத்தின் பதற்றம் குறைவதற்கு முன்னர் இன்னும் ஒரு தகவல் தொடர்பாடல் கடையில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதற்கான சீ.சீ.டீ.வி காணாளி வெளியாகியுள்ளது.

இளைஞரொருவர் இரவில் குறித்த கடைக்கு அருகில் வரும் காட்சியும், கடைக்குள் நுழைந்து காசாளர் இடத்தில் ஏதோ ஒன்றை திருடும் காட்சியும் பதிவாகியுள்ளது.

கடையில் பெறுமதியான பல பொருட்கள் உள்ள போதிலும் ஏதோ ஒரு பொருளை மாத்திரம் திருடுவதன் நோக்கம் குறித்து குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறான திருட்டு சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளது.

சீ.சீ.டீ.வி காட்சிக்கமைய இந்த திருடர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

Latest Offers