முல்லைத்தீவு ATM அறையில் நீண்ட நேரம் இருந்த இராணுவ வீரரால் மக்கள் பாதிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு இலங்கை வங்கி ஏ.ரி.எம் தானியங்கி இயந்திரம் உள்ள அறைக்குள் இன்று நுழைந்த இராணுவ வீரர் ஒருவர் 20 நிமிடங்களின் பின்னர் வெளியே வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த ஏ.ரி.எம் சேவையை பெற்றுக் கொள்வதற்காக குறித்த இராணுவ வீரர் வெளியே வரும்வரை அவ்விடத்தில் யுவதிகள் பலர் காத்து நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நகர்ப்பகுதியில் காணப்படும் திறந்தவெளி ஏ.ரி.எம் வங்கி கிளைகளில் ஒரு இராணுவவீரர் ஒன்றிற்கு மேற்பட்ட தானியங்கி அட்டைகளை பயன்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தானியங்கி வங்கி கிளைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் பொதுமக்கள், அதிக நேரம் வீண்விரையமாகுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

Latest Offers