வவுனியா, வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நேற்றிரவு நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசேட அபிஷேகங்களுடன் பூஜை இடம்பெற்றமையினால் மூலஸ்தான விக்கிரகத்தில் அணியப்பட்டிருந்த 2 பவுண் சங்கிலி உட்பட வேறு பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
காலை வேளை பூஜைக்காக ஆலய கதவை திறக்கும் போதே பூட்டு உடைக்கப்பட்டமை தொடர்பில் தெரிய வந்துள்ளதுடன், அது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.