நீரில் அடித்து செல்லப்பட்ட மேலுமொரு சிறுமியின் சடலம் மீட்பு - ஒருவரை தேடும் பணி தீவிரம்

Report Print Vethu Vethu in சமூகம்

மாத்தளையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்து காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளில் இருவரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகளில் ஒருவரின் சடலம், சம்பவ இடத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய இரு சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இன்னுமொரு சிறுமியின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

தற்பொழுது எஞ்சியுள்ள ஒரு சிறுமியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் பெயர்கள்

கிங்சிலி ரத்நாயக்க (வயது – 40)

சந்திராகாந்தி (வயது - 59)

வினுக்கி ரத்நாயக்க (வயது – 13)

ஹிருனி ரத்நாயக்க (வயது - 4)

ரவிந்திர லசந்த (வயது – 39)

ருவனி டில்ருக்ஷி (வயது – 38)

ரிஷாதி வீகிஷா (வயது - 12)

சந்துனி (வயது – 12)

முதலாம் இணைப்பு

மாத்தளையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனவர்களில் ஐவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லக்கல - எடன்வல, தெல்கமுவ ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது காணாமல் போன எட்டுப் பேரில் ஐவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் மூவரை காணவில்லை எனவும் அவர்களை தேடு நடவடிக்கை பொலிஸார் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழ்ந்த ஐவரில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போயுள்ள மூவரும் பெண்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாத்தன்டிய பிரதேசத்தில் இருந்து வருகைத்தந்த 12 பேரில் 8 பேர் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.