இலங்கையின் பல பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாடு முழுவதிலும் இன்றைய தினம் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடு முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த தெளிவூட்டல் செயற்பாடு தொடர்ச்சியாக ஒரு மணித்தியாலம் இடம்பெறவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள கரையோர பிரதேசங்களில் இந்த முன்னெச்சரிக்கை தெளிவூட்டல் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக கரையோர பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட உள்ளனர்.

குறித்த செயற்பாட்டிற்கு காலநிலை அவதான நிலையத்தின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.