அம்பாறையில் அடைமழை: இன்று சுனாமி ஒத்திகை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், சாய்ந்தமருது தோணாப்பகுதியில் வெள்ள நீர் அதிகளவில் தேங்கியிருந்ததன் காரணமாக உரிய தரப்பினர் அதனை கவனத்திற்கொண்டு விரைந்து செயற்பட்டு வெள்ள நீரை இயந்திரங்களின் உதவியுடன் கடலுக்குள் அனுப்பியுள்ளனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு திருக்கோவில் உள்ளிட்ட சுனாமி கோபுரம் இருக்கும் 7 பிரதேசங்களில் இன்றைய தினம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.