இராணுவ தலைமையகத்தில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

பத்தரமுல்ல - பெலவத்தை, அக்குரேகொடை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ தலைமையத்தில் இருந்த பொருட்களை கொள்ளையிட்ட பெண்ணொருவர் உட்பட மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பன்னிப்பிட்டிய - எருவ்வல பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 34 மற்றும் 49 வயதானவர்கள் எனவும் இவர்கள் பன்னிப்பிட்டிய மற்றும் கோட்டேகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.