வெளிநாட்டவர்கள் இருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

குடிவரவு, குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறி, செல்லுப்படியான வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தெஹிவளை ஹில் வீதி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவகம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களே நேற்று இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

27 மற்றும் 48 வயதான இவர்கள் இன்று கல்கிஸ்சை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Latest Offers