ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் டிசம்பர் முதல் சீனாவின் செயற்பாடுகள் ஆரம்பம்

Report Print Aasim in சமூகம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, அதன் செயற்பாடுகளை டிசம்பர் மாதம் தொடக்கம் ஆரம்பிக்க உள்ளது.

இத்தகவலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற சீனா-இலங்கை கூட்டு தொழிற்சாலைத் தொகுதியை திறந்து வைத்துப் பேசும் போது தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் குத்தகைக்காக சீனா 600 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.

அதனைக் கொண்டு இலங்கை அரசாங்கம் வௌிநாடுகளில் பெற்றுக் கொண்ட கூடிய வட்டிவிகிதம் கொண்ட கடன்களை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் துறைமுகத்துடன் இணைந்ததாக எரிபொருள் விநியோக கேந்திரம், எல்.என்.ஜீ. மின்னுற்பத்தி நிலையம், சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் கப்பல் தடாகம் என்பன போன்றவற்றையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்