யாழில் வெளிநாட்டு மோகத்தால் பணத்தை பறிகொடுத்த நபர்: ஒருவர் கைது

Report Print Shalini in சமூகம்

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் பருத்தித்துறையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் , மருதங்கேணியைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 6 இலட்சம் ரூபாவை வாங்கியுள்ளார்.

எனினும் பணம் கொடுக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் குறித்த நபர் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பும் எந்தச் செயலிலும் ஈடுபடாமல் தலைமறைவானார் என பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.