களுவாஞ்சிக்குடி, கோட்டைக்கல்லாறு பகுதியில் வீதி புனரமைப்பு பணிகள்

Report Print Navoj in சமூகம்

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோட்டைக்கல்லாறில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த கண்ணகி அம்மன் கோவில் வீதி புனரமைப்புப் பணிகள் நேற்று மாலை இடம்பெற்றுள்ளன.

கிராமிய பொருளாதார அமைச்சின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த வீதிக்கான ஆரம்ப புனரமைப்பு பணிகள் அமைச்சின் இணைப்பாளர் எஸ். ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின்போது, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.கண்ணன், ஜெ.மீனா, பிரதேச பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.