நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்கள்

Report Print Sujitha Sri in சமூகம்

நாட்டில் அனைவரும் பெற்றோல் கொள்வனவு தொடர்பில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு இரு அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தேவைக்கு அதிகமாக பெற்றோலை கொள்வனவு செய்ய வேண்டாம் என எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சு பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

போதுமான அளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்ற நிலையில் மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சு கோரியுள்ளது.

இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து பல பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரசன்ன பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அவ்வாறு ஏதேனும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் அது தொடர்பான தகவல்கள் உடனடியாக தெரியப்படுத்துமாறு அறிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு, நிலையங்களை மூடுவதற்கு எந்த உரிமையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.