யாழ். குடா நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

பருத்தித்துறையில் மழை காரணமாக 67 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மழைவீழ்ச்சி தொடருமாக இருந்தால் யாழின் பல பகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்றைய தினம் 67 குடும்பங்களைச் சேர்ந்த 198பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், யாழ். குடா நாட்டில் தொடர் மழைவீழ்ச்சி பதிவாகி வருவதால் அனைத்து பகுதிகளிலும் நீர் வேகமாக நிரம்புகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் மக்கள் அனைவரையும் எச்சரிக்கையாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.