நலிவுற்ற மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படும்

Report Print Navoj in சமூகம்

கடந்த கால யுத்தத்தினால் நலிவுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படும், குறிப்பாக பெண்கள் தலைமைதாங்கம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதன் மூலம் மூலம் பிள்ளைகளுக்குரிய கல்வியைப் பெற முடியும் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கோட்டைக்கல்லாறு பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களினதும், யுவதிகளினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா மாதர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சந்திரிக்கா ராஜ்மோகன் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதியை தெரிவு செய்யவேண்டும். அப்போதுதான் உங்களின் பிரச்சினைகள், தேவைகள் பிரதேச செயலகங்கள் முதல் நாடாளுமன்றம் வரையும் ஒலிக்கும். அப்போது தான் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும்.

எதிர்வரும் தேர்தல்களில் உங்களுக்கு சேவை செய்யும் பலமிக்க அரசியல்வாதிகளை தெரிவு செய்யுங்கள்.

கடந்த தேர்தலில் உங்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதியை நீங்கள் இழந்துள்ளீர்கள். வாழ்வது தமிழாக இருந்தாலும் வளர்வது பொருளாதாரமாக இருக்கட்டும். பொருளாதாரத்தை தேடுவதன் மூலம் எங்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.