பாரதி முன்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்வுகள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - வைரவபுளியங்குளம் பாரதி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றுள்ளன.

குறித்த நிகழ்வுகள் வவுனியா கலாச்சார மண்டபத்தில், பாரதி முன்பள்ளி அதிபர் ஜெயராசா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன்போது, பாடசாலை சிறார்களின் காவடி, பாம்பு நடனம், ஆங்கில பாடல், சிங்கள பாடல், கண்ணன் நடனம், குறவன் குறத்தி நடனம், பிராணிகளின் கொண்டாட்டம், பலே நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பூங்கோதை செல்வராஜன் சிரேஷ்ட விரிவுரையாளர் (வவுனியா வளாகம்) , சு.பரமானந்தம் உப பீடாதிபதி (தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா), கெளரவ விருந்தினர்களாக ச.அருள்வேல் நாயகி (முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர்), பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.