மாவீரர் தினத்தை முன்னிட்டு சிரமதானப் பணி

Report Print N.Jeyakanthan in சமூகம்

மன்னார், ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கார்த்திகை 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த நிகழ்வுகள் இன்று காலை பத்து மணியளவில் மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்த குழுவினால் நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் மாவீரர்களின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், இம்முறை சிறப்பான முறையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை நடத்த வேண்டுமென்றும், தொடர்ந்து நடைபெறவிருக்கும் சிரமதான பணியிலும் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.